செய்திகள்

மக்களின் சேவைகளை இலகுபடுத்த இலத்திரனியல் பதிவு

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அரச அலுவலகங்களின் மக்கள் சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சேவை பெறுவதற்காக வரும் மக்களின் சேவைகளை இலகுபடுத்தும் வகையில் சேவைகளை பதிவு செய்து இலத்திரனியல் பதிவு துண்டு வழங்கும் வேலைத் திட்டம் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் வழிகாட்டலில் செயலகத்தில் சேவை பெறுவதற்காக வரும் மக்களின் சேவைகளை பதிவு செய்து இலத்திரனியல் பதிவு துண்டு வழங்கி வைக்கப்படுகின்றது. மக்களின் சேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனில் குறித்த துண்டினை மீள அலுவலகத்தில் வழங்கும் பட்சத்தில் சேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிய முடியும்.

செயலகத்தில் உள்ள சேவை வழங்கும் பிரிவில் சேவைகள் திறம்பட மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை அறிந்து கொள்வதற்கு குறித்த இலத்திரனியல் பதிவு துண்டு வழங்கும் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரச அலுவலகத்தில் திறம்பட வேலைகள் இடம்பெறுகின்றது என்பதை பொதுமக்கள் அறியும் வகையில் இச்செயற்பாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. (150)

Related posts

சீமெந்துக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

கதிர்

வேட்பாளர்கள் – கட்சிகளுடன் பேசத் தயாரானது கூட்டமைப்பு!

G. Pragas

பெரிய வெங்காயத்தின் உத்தரவாத விலை அதிகரிப்பு

reka sivalingam

Leave a Comment