செய்திகள்பிரதான செய்தி

மக்களை நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பேன்– ரணில் உறுதி

இலங்கை மக்கள் மூன்றுவேளை உணவு உட்கொள்ளும் வகையிலான பிரஜைகளாக இருக்க வேண்டும்.

அவர்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள சிரமங்களிலிருந்து மீட்டெடுக்கவே பிரதமர் பதவியை ஏற்றேன்–
இவ்வாறு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை பிரதமராகப் பதவியேற்றபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உணவுப் பற்றாக்குறை, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் என கடுமையான சூழ்நிலை தற்போது நிலவுகிறது. இவற்றைத் தடுக்க ஆளும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கைகளை தனியாக முன்னெடுக்க முடியாது. ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகள் அவசியம்.

மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ளும் வகையிலான பிரஜைகளாக இலங்கையர்கள் இருக்க வேண்டும். இலங்கை ரூபாவுக்கு பெறுமதி இருக்க வேண்டும்.

அத்துடன் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலமொன்றை கட்டமைத்து வழங்க வேண்டும்.

‘கோத்தா கோ கம’ மீது நான் கை வைக்கமாட்டேன். அதனை முன்னோக்கி கொண்டு செல்லவேண்டும். பொலிஸாரும் அதற்கு இடையூறு விளைவிக்கமாட்டார்கள் – என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,940