செய்திகள்வணிகம்

மஞ்சள், மிளகுக்கு நிர்ணய விலை வேண்டும் – ஜனாதிபதி!

மஞ்சள் மற்றும் மிளகிற்கு நிர்ணய விலை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து சர்வதேச சந்தைவாய்ப்புகளைப் பெற்று மஞ்சள் மற்றும் மிளகு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சிறு தோட்ட பயிர்செய்கைக்கான அபிவிருத்தியுடன் தொடர்புடைய கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்போது கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கருவா, ஏலம், கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்டப் பயிர்செய்கைகளின் விருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282