செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

மடத்தடியில் வாள்வெட்டு; இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – இருபாலை மடத்தடி பகுதியில் இன்று (22) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடத்தடிப்பகுதியில் மரணச் சடங்கு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மரணச் சடங்கில் இரு தரப்புக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் வாள் வெட்டு சம்பவமாக மாறியுள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – பெற்றோர் கைது!

G. Pragas

ரயில் வீதிகள் நவீனமயப்படுத்த வேண்டும்-ரத்னாயக்க

reka sivalingam

வெளியாக முன் கோடிகளை அள்ளிய மாஸ்டர் உரிமம்!

Bavan