கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

மட்டக்களப்பில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமாகிய கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தேர்தல் நடாத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேன கருத்து தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலை சுமூகமாக நடாத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கென 57 நடமாடும் பொலிஸ் பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக விசேடமாக இரண்டு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டு பொலிஸ் காவலரண்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” – என்றார். (150)

Related posts

மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு…!

Tharani

மத்தியூஸின் வெறித்தனம் – தொடரை வென்றது இலங்கை!

Bavan

திரிபோஷா கிடைக்குமா? கிடைக்காதா?

Tharani