கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மட்டக்களப்பில் தொடர் டெங்கு ஒழிப்பு திட்டம் அமுல்!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் சிரமதான நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அன்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் இடம்பெற்ற டெங்கு முகாமைத்துவக் கூட்ட தீர்மானத்திற்கமைவாக இத்திட்டம் அமுலாகியுள்ளது.

இதன்படி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இச்சிரமதானப் பணிகள் மாவட்ட செயலக வாளாகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

இதேவேளை அனைத்து அரச அலுவலகங்கள், பாடசாலைகள், அரச கட்டிடங்கள் அனைத்திலும் இச்சிரமதானப் பணிகள் இடம்பெறவேண்டும் என்பதுடன், இச்சிரமதானம் நடைபெற்றமை தொடர்பாக குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உரிய அரச அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் அரச கட்டிடங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (150)

Related posts

ஊரடங்கின் பின்னர் சிறுவர் வன்முறை அதிகரிப்பு!

G. Pragas

விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

reka sivalingam

அருட்தந்தையை தள்ளி விட்டுத் தாக்க முயன்ற பொலிஸ்!

G. Pragas