செய்திகள்

மட்டக்களப்பில் வெள்ளத்தால் மக்கள் அவதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் அடை மழை காரணமாக மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீரால் போக்குவரத்து செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனினும் மண்டூர் பிரதேசத்தையும் வெல்லாவெளி பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான பாதையில் இரு இடங்களினால் வெள்ள நீர் வடிந்தோட தொடங்கியுள்ளது.

இதேவேளை, படுவான்கரை பிரதேசத்தில் வயல்கள் மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக சிறு குளங்கள் நிரம்பியுள்ளமையினாலும் அந்த குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீர் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொக்கேயின் மாத்திரைகளை விழுங்கி கடத்திய பிரேசில் பெண் கைது!

G. Pragas

ஓட்டுக்கு கொடுத்த பரிசுகளை அம்மனிடம் ஒப்படைத்த வாக்காளர்!

Bavan

கண்ணீரில் நனைந்தது கள்ளப்பாடு

கதிர்

Leave a Comment