in , ,

மட்டக்களப்பு கம்பஸ் தொடர்பில் கல்வி அமைச்சர் எடுத்த முடிவு!

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு கம்பஸானது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வளாகமாகவோ தனியானதொரு பல்கலைக்கழகமாகவோ மாற்றப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கம்பஸிற்கு பட்டங்களை வழங்கும் அனுமதியை உயர்கல்வி அமைச்சோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ வழங்கவில்லை எனவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களை விட இந்த வளாகத்தில் வசதிகளும் கட்டடங்களும் அதிகம் இருப்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்காக அதனை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு 30,000 மாணவர்கள் மாத்திரமே இணைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டில் 41,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஓமந்தையில் 16 எருமைகளை பலியெடுத்த ரயில்!

தந்தை செலுத்திய ஆட்டோவில் சிக்கி மகன் பலி!