கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

மட்டக்களப்பு கல்வியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு!

மட்டக்களப்பு – தாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரியும் குறித்த கல்லூரிக்கு அட்டாளைச்சேனை முதல்வரை இடமாற்றியதை இடைநிறுத்துமாறு கோரியும் இன்று (06) ஆர்ப்பட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியினை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம், கல்வியில் கல்லூரிக்கு முன்பாக நடைபெற்றது.

மேலும் இப்பகுதிகளிலுள்ள தமிழர்களின் கலாசாரத்தினையும் பாரம்பரியத்தினையும் கொண்ட தேசிய கல்வியியல் கல்லூரிக்கு, முதல்வராக தமிழரே நியமிக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

1992ம் ஆண்டு கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழர் ஒருவரே நியமிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று இந்த மாற்றம் வேறு ஒரு இனத்தவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

‘இது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம் அல்ல எமது கலாசாரத்தினை பாதுகாக்கவே முற்படுகின்றோம்’, ‘மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்காதே’ போன்ற சுலோசகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Related posts

மனைவியை துஷ்பிரயோகம் செய்யக் கட்டாயப்படுத்தியவர் உட்பட ஐவர் கைது

G. Pragas

எனது ஆட்சியில் அரசியல் கொலைகள் நடக்கவில்லை – சிறிசேன

G. Pragas

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்

G. Pragas