கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகர சபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு 26 உறுப்பினர்களின் ஆதரவோடு வெற்றிப்பெற்றுள்ளதாக மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார். குறித்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவை அங்கீகரிக்கக் கோரும் விசேட சபை அமர்வு நேற்று (13) இரவு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மாநகரசபை முதல்வரால் வாசிக்கப்பட்டு சபையின் அங்கீகாரத்துக்கு விடப்பட்டது. இதற்கு ஆதரவாக 26 வாக்குகளும் எதிராக 09 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், இரண்டு வாக்குகள் நடுநிலையாகவும் இடப்பட்டிருந்தன. அத்தடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சபை அமர்வில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இவ் வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவில் 2020ம் ஆண்டிற்கான மொத்த வருமானமாக 421.7 மில்லியன் ரூபாய்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் சபையின் சொந்த வருமானம் 197.9 மில்லியன் ரூபாய்களாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

கும்புறுமூலை தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட மௌலானா

admin

எல்பிட்டிய வெற்றி ஜனாதிபதி தேர்தலின் நம்பிக்கை

G. Pragas

குழந்தையை பிரசவித்த தாய்; காய்ச்சலினால் மரணம்!

G. Pragas

Leave a Comment