in ,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 186 பேருக்கு தொற்றுறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 186 பேர் கொரோனா தொற்றாளர்கள் நேற்று (07) அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் மருத்துவர் என்.மயூரன் தெரிவித்தார்.

சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் முழுதும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் வீதியில் அநாவசியமாக பயணம் செய்தோர், வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டோர், நடமாடும் வியாபாரம் செய்தோர் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 33 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 14 பேரும், வாழைச்சேனை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 05 பேரும், காத்தான்குடி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 20 பேரும், ஏறாவூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில 27 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 20 பேரும், செங்கலடி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் செங்கலடி 01 நபரும், வவுணதீவு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 03 பேரும், கிரான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கிரான் 03 பேரும், ஓட்டமாவடி சுகாதார மருத்துவு அதிகாரி பிரிவில் 31 பேரும், ஆரையம்பதி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 03 பேரும், பட்டிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 16 பேரும், பொலிஸார் 03 பேரும், சிறைச்சாலையில் 07 பேருமாக மொத்தம் 186 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதே வேளை கோறளைப்பற்று மத்தி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்தில் இரண்டு பேரும் ஆரையம்பதி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் காங்கயன்ஓடை கிராமத்தில் ஒருவருமாக மாவட்டத்தில் மூன்று பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிவூட்டில் அறிமுகமாகும் நாகசைதன்யா

இராமாயண கதையில் சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கோரும் கரீனா கபூர்