கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

“மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள்” ஆய்வு நூல் வெளியீடு!

“மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள்” எனும் பெயரில் காத்தான்குடி – ஆய்விற்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தினால் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அங்கத்துவம் பெறும் பெண்கள் தொடர்பான ஆய்வறிக்கை நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (13) காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் நடைபெற்றது.

ஆய்விற்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றிய பணிப்பாளர் திருமதி அனீஷா பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் திருமதி ஜெம்குத் நிசா மசூத், காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச மட்ட சமூக ஆர்வளர்கள், மகளிர் ஒன்றிய பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ‘மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அங்கத்துவம் வகிக்கின்ற பெண் உறுப்பினர்களை மையப்படுத்தி பெண்களின் அனுபவத்தினை புரிந்து கொண்டு அவர்களது வினைத்திரனுடனான பங்களிப்பிற்கும், ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்கும் ஆதரவளிப்பதற்குமாக உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள பெண் அங்கத்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தடைகளையும் அடையாளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் பெண்கள் எனும் ஆய்வறிக்கை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது’ – என்று திருமதி அனீஷா பிர்தௌஸ் தெரித்தார். (150)

Related posts

மேன் முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நவாஸ்

G. Pragas

இலங்கையின் பல பகுதிகளில் கனமழை! மண்சரிவு அபாயம்!

Bavan

மு.சாே.கட்சி தலைவர் உட்பட 42 பேர் கைது!

Tharani