செய்திகள்

மட்டுவில் சில பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரசேங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி, போரதீவு, பொறுகாமம் மற்றும் பழுகாமம் போன்ற இடங்களிலுள்ள குளங்கள் நிரம்பியுள்ள நிலையில் உறுகாமம், உன்னிச்சை, நவகிரி, மற்றும் கடுக்காமுனைக்குளம் உள்ளிட்ட பெரிய குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி, மண்டூர் – நாவிதன்வெளி பிரதான வீதி ஆகியவற்றை ஊடறுத்து வெள்ளநீர் செல்வதால், அப்பகுதியின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

Related posts

சண்டையை விலக்க முயன்ற பெண் கத்திக்குத்தில் படுகாயம்!

G. Pragas

விமலின் வடக்கிற்கான விஜயம்…!

Tharani

போதைப் பொருள் குற்றச் செயலை தடுக்க நடவடிக்கை

Tharani