கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மட்டு’வில் வாக்களிப்பு வீதம் அதிகரித்தாக வேண்டும் – சம்பந்தன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தினை கடுமையாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

“04 பிரதிநிதிகள் பெற வேண்டிய இந்த மாவட்டத்தில் மக்களின் வாக்களிப்பு வீதக் குறைவினால் 03 பிரதிநிதிகளை மாத்திரமே பெறக் கூடியதாக இருக்கின்றது. இந்நிலையினை அனைவரும் ஒன்றிணைந்து மாற்ற வேண்டும்.

திருகோணமலையில் சுமார் 85 வீத்திற்கு மேல் மக்கள் வாக்களிக்கையில் மட்டக்களப்பில் அது வெகு குறைவாகவே இருக்கின்றது. வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கான வாக்களிப்பினை அதிகரிக்கச் செய்யுமிடத்து 04 ஆசனம் கிடைப்பதென்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்காது” – என்றார். (150)

Related posts

கடுமையான பகிடிவதை; மூத்த மாணவனுக்கு தடை!

G. Pragas

அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியது

கதிர்

சுன்னாகம் பேருந்து நிலையத்தில் பத்திரிகை வாசிக்க வசதி

G. Pragas