in ,

மட்டு. கிராம சேவை ஊழியர்கள் கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களை முகநூல் வாயிலாக அவதூறாக பேசியதாக எதிர்ப்பு தெரிவித்து கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கையினை இன்று (22) மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும்கிராம சேவை உத்தியோகத்தர்கள் கறுப்புப்பட்டி அணிந்து செயலக முன்பாக தங்களது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பின்னர் கறுப்புப்பட்டியுடன் தங்களது கடமைகளை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓந்தாச்சிமடம் பகுதி கிராம சேவை அதிகாரியை முகநூல் வாயிலாக ஒருவர் அவதூறாக பேசியதுடன், அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடையாற்றும் கிராம சேவை அதிகாரிகளையும் அவதூறாக பேசி கிராம அதிகாரிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. (150)

தூக்கிட்ட நிலையில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு!

போதைப் பொருளுடன் பல்வேறு பகுதிகளில் ஆறு பேர் கைது!