in ,

மட்டு.சீயோன் ஆலயத்திற்கு சென்ற எம்பிகள்!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான டாெக்டர் கவிந்த ஜயவர்த்தன, ஹெட்ட அப்புகாமி ஆகியோர் விஜயம் செய்தனர்.

இதன்போது சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

தாக்குதல் சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் முதல் தடவையாக தாக்குதல் நடந்த ஆலயத்தில் இந்த ஆண்டுதான் ஆராதனை நடத்தவுள்ளதாக சீயோன் தேவாலயத்தின் பிரதம பாஸ்டர் ரொசான் மகேசன் தெரிவித்தார்.

அச்சத்தால் மே தின பேரணிகளை நிறுத்தியுள்ளனர்- ஜேவிபி குற்றச்சாட்டு!

போலி செய்திகள் தொடர்பான சட்ட வரைபுக்கு அமைச்சரவை அனுமதி!