கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

மட்டு மக்களின் வீடுகளுக்கு நேரடியாக செல்லும் அத்தியாவசிய பொருட்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்லும் வேலைத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள பதினாறு பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாக நியாய விலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வேலைத்திட்டமாக இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கொரானா அத்தியாவசிய பொருட்கள் விநியோக படையணி உறுப்பினர்களும் கூட்டுறவு சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

சீனி, பருப்பு, கடலை, வெங்காயம், அரிசி, கோதுமை மா, பால் மா, உப்பு, டின் மீன் போன்ற பொருட்கள் போதியளவு உள்ளதாகவும் இவற்றை மக்களுக்கு நியாய விலையில் வழங்க எங்களது திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார். (150)

Related posts

கொரோனா வைரஸால் இதுவரை 216 பேர் பலி!

G. Pragas

காணாமல் ஆக்கப்பட்வர்களை புதிய ஜனாதிபதி விடுவிக்க வேண்டும்!

கதிர்

மின்சாரத்தினை சிக்கனப்படுத்த வேண்டுகோள்!

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.