கிழக்கு மாகாணம் செய்திகள்

மட்டு வைத்தியத்துறையை பாராட்டிய ஆயர்

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணியாளர், வைத்திய நிபுனர்கள், வைத்தியர்கள், வைத்திய உதவியாளர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகல பணியாளர்களினதும் அற்பணிப்புடன் தியாக சிந்தனை மிக்க பணியினை மனதார உளம்கனிந்து பாராட்டுவதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்பின் போசகரான மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மேலும்,

நமது மக்களுக்கு முக கவசங்களை பாவிக்கும் படியாக சுகாதார தரப்பினர் பணிக்கின்றபோதும் அதனை சில மணி நேரம்கூட அணிவதற்கு தயாரில்லாதபோது இந்த அற்பணிப்பு மிக்க வைத்திய சேவையினை வழங்கி வருகின்ற வைத்தியர்களும் தாதியர்களும் பாதுகாப்பு அங்கியினை தொடர்ந்து 12 மணித்தியாலமாக அணிந்து கொன்டு தங்களின் கன்னியமான பணியினை தங்கள் உயிரையும் மதிக்காது சேவையாற்றுவது இறைவனுக்கு இணையான சேவை எனவும் ஆயர் பாராட்டினர்.

இதேவேளை, அற்பணிப்புடன் தங்களின் குடும்பம் குழந்தைகளை எல்லாம் மறந்து 24 மணித்தியாளமும் விடுதிகளில் தங்கியிருந்தும் தங்கள் பணியினை ஆற்றிவருகின்றனர். அவர்களுக்கான உணவுக்குகூட வீடுகளுக்கு செல்ல முடியாதவர்களாக உள்ளனர். அதற்காக பணிப்பாளரின் சிறப்பான செயற்பாட்டினால் அவர்களுக்குன உணவு, விடுதில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

இதனைத்தவிரவும் புனர்வாழ்வு மத்திய நிலைத்தினுடாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பு உணவுக்குத்தேவையான உதவியை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிவில் அமைப்பின் உறுப்பினர் எஸ். மாமாங்கராஜா தெரிவித்தார. (150)

Related posts

நாம் வீழ்ந்தாலும் எழுவோம்- ததேக தலைவர் ஸ்ரீகாந்தா

G. Pragas

மூத்த ஊடகவியலாளர் பெருமாள் காலமானார்

G. Pragas

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழப்பு

கதிர்

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.