செய்திகள் யாழ்ப்பாணம்

சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளினான மணல் அகழ்வு ,வாள் வெட்டுக்கள்,கொள்ளைக் கும்பல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு மற்றும் பொலிசாருடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (24) இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் முக்கியமாக சட்டவிரோத மண் அகழ்வு வால்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மற்றும் வழிப்பறி போன்ற குற்றச் செயல்கள் கட்டுப்படுத்துவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பொலிஸ் மூத்த அதிகாரிகள் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்  மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மணல் கொள்ளை நடைபெறும் இடங்களின்  அந்தந்த பிரதேச செயலர்கள் நமக்கு அடையாளம் காட்டினால் அந்தந்த இடத்தில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குறித்த மணல் கொள்ளையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

Related posts

மாற்றுத்திறனாளிகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்!

G. Pragas

பாடசாலையில் தண்டனை வழங்குவதை தடுக்க வருகிறது புதிய சட்டம்

G. Pragas

மருதம் கலைக்கூடத்தின் ஆண்டு நிறைவு விழா!

Tharani

Leave a Comment