in , ,

மணல் அகழ்வு செய்யும் இடத்திலேயே சட்டவிரோத கல் அரிவு!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தோட்டவெளி கிராமத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த சட்டவிரோத மணல் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஜாட் அமைத்து கல் அரிந்து விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தோட்டவெளி கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் அண்மைக் காலமாக காடுகள் அழிக்கப்பட்டு மண் அகழ்வு இடம்பெற்று வந்தது. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது குறித்த பகுதியில் மண் அகழ்வது தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் தற்போது இரண்டு ஜாட் அமைக்கப்பட்டு மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு கல் அரிந்து வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு, ஜாட் அமைக்கப்பட்டு குழாய்க்கிணறு அமைக்கப்பட்டு கல் அரியும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது. இயந்திரங்கள் மற்றும் வேலைக்கு ஆட்களை வைத்து சட்ட விரோதமான முறையில் பாரிய கிடங்குகள் தோண்டப்பட்டு மணல் அகழ்வு செய்யப்பட்டு அவ்விடத்திலேயே கல் அரிந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதாக தெரிய வருகின்றது.

யாழிலும் கொரோனா ஆட்ட தீவிரமாகலாம்; விழிப்போடு இருங்கள் – மகேசன்

ஹிட்லரை போல் ஒரே அறிக்கையில் அரசியல் எதிரிகளை அழிக்க முயற்சி!