செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

மணியம் தோட்டக் கொலை; தந்தை மகனுக்கு மறியல்

யாழ்ப்பாணம் – அரியாலை மணியந் தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவரை கோடாரியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த தந்தையும் மகனும் பொலிஸில் சரணடைந்த நிலையில் நாளை (23) வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் மூத்த சகோதரியின் கணவரும் அவரது தந்தையும் தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

இந்தக் கொலை தொடர்பான இறப்பு விசாரணை நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் இடம்பெறவுள்ளதால் சந்தேக நபர்கள் இருவரையும் நாளைவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சஜித் அணி எதிர்ப்பு!

G. Pragas

பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி அறிவிப்பு

G. Pragas

நான் ஓய்வு பெற மாட்டேன் – ஜனாதிபதி

G. Pragas

Leave a Comment