in ,

மண்டியிட்ட இலங்கை; பலம் பெற்ற இங்கிலாந்து!

சுற்றுலா இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (14) ஆரம்பமானது.

முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி வெறும் 135 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் தினேஸ் சந்திமால் (28), அஞ்சேலா மத்தியூஸ் (27) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டொம் பேஸ் (30/5), ஸ்ருவோட் ப்ரோட் (20/3) விக்கெட்களை கைப்பற்றினர்.

இதனையடுத்து தமது முதல் இனிங்ஸில் ஆடிவரும் இங்கிலாந்து அணி முதலாம் நாள் ஆட்ட நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றது.

இன்று தாெடர்ந்து ஆடி மேலதிகமாக 2 இரு விக்கெட்களுடன் 4 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களை பெற்றுள்ளது. மழை காரணமாக இன்று அதிகமான ஓவர்கள் வீசப்படவில்லை.

துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் சதமடித்து (158*) களத்தில் உள்ளார். அறிமுக வீரர் டான் லாரன்ஸ் (73), ஜோனி பயஸ்டாேவ் (47) ஓட்டங்களை பெற்று அவுட்டாகினர். பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய (131/3) விக்கெட்களை கைப்பற்றினார்.

அழகுக்கலை நிலையத்தில் மயக்கிய மணப் பெண்கள் உள்ளிட்ட அறுவர்!

நாவலப்பிட்டி நகர் முடக்கம்!