செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

மண்டைதீவில் வயல் கேணியில் விழுந்த இரு சிறுவர்கள் பலி!

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சோகச் சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் மண்டைதீவைச் சேர்ந்த சகோதரர்களான சாவிதன் (வயது-7) சார்வின் (வயது-5) ஆகிய இருவருமே வயல் கேணியில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஊர்காவற்துறை தொகுதியின் தேர்தல் முடிவு!

G. Pragas

பாம்பு உட்புகுந்ததால் தாமதமான ராஞ்சிக்கிண்ணத் தொடர்

Bavan

ஜனாதிபதியின் கொள்கை உரை குறித்து நாளை விவாதம் ஆரம்பம்

Tharani