செய்திகள் பிரதான செய்தி மலையகம்

மதுபானசால யில் கொள்ளை! மதுப்பிரியர்கள் கைவரிசை

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் நுவரெலியா – திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகர பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று இன்று (10) அதிகாலை உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மதுபானசாலையின் முன் கதவு திறக்கப்பட்டு இருந்ததைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், மதுபானசாலை உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

வவுனியா மாவட்டம்; கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Tharani

சீன நிறுவனங்கள் சில இலங்கையுடன் கைகோர்த்தது..!

Tharani

வரலாற்றில் இன்று- (05.02.2020)

Tharani