செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

மதுபான சாலைகளுக்கு சீல் வைப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு சீல் வைக்கப்படுவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் காெரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபான சாலைகளைத் திறக்க அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் காெரோனா வைரஸ் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மதுபான சாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு சீல் வைக்கப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல மாவட்டங்களில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிந்தனைத்துளி

Tharani

மெக்சிகோ கடத்தப்பட்ட இரு இலங்கையர்கள் மீட்பு!

Tharani

சற்றுமுன் விபத்தில் இருவர் பலி!

G. Pragas