in ,

மது போதையில் இருந்தோரால் குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல்!

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொங்கல் பொருட்கள் வாங்கச் சென்ற பாடசாலை மாணவன் உட்பட மூவர் மீது மது போதையில் இருந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டு, அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் அறுத்து சென்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏ- 35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் பொங்கல் பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற பாடசாலை மாணவனும் அவரது சகோதரும் பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பிய சமயம் மது போதையில் இருந்தவர்களால் குறித்த மாணவன் மீதும் அவரது சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவத்தின் போது அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஒன்றும் அறுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது பிள்ளைகள் தாக்கப்பட்டது தொடர்பாக கேட்பதற்கு சென்ற அவர்களது தாய் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பாடசாலை மாணவன் உட்பட 2 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி உள்ளிட்டோரின் வாழ்த்து செய்தி

மோ.சைக்கிளை இயக்கிய சிறுவன்; குழந்தை பலி! – மட்டுவிலில் சம்பவம்