செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

மது போதையில் பேருந்தை செலுத்திய இபோச சாரதி

யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த அரச பேருந்தின் சாரதி மது போதையில் இருந்தமையால் பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அதில் பயணித்த 46 பயணிகளும் பிறிதொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கும் பேருந்துகளை சோதனையிடும் நடவடிக்கையை 512ஆவது படைத் தளத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் நாவற்குழியில் நேற்று இரவு முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து 7.45 மணிக்கு அக்கரைப்பற்றுக்கு புறப்படும் பேருந்து நாவற்குழி சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனையிட்ட பேது சாரதி மது போதையில் இருந்தமை கண்டறியப்பட்டது. சாரதியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட இராணுவத்தினர், பேருந்தை சோதனையிட்ட போது, 2 பியர் ரின்களும் மதுப் போத்தல் ஒன்றும் சாரதியின் இருக்கைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டன.

இதனையடுத்து சாரதி கடுமையாக எச்சரிக்கைப்பட்டதுடன், அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த பேருந்தில் இருந்த பயணிகள் பிறிதொரு பேருந்தில் அனுப்பி வைகப்பட்டர்.

Related posts

மாணவன் சடலமாக மீட்பு

G. Pragas

நான்கு சிறுமிகளை பலவந்தப்படுத்திய வைத்தியர் கைது!

Tharani

பட்டாசுக் காயங்களுடன் எவரும் அனுமதிக்கப்பட இல்லை!

G. Pragas