உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

மனிதனிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா பரவும் அபாயம்!

மனித இனத்துடன் பரிணாம வளர்ச்சி ரீதியாக நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் மனிதக் குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனால், மனிதக் குரங்குகள், ஒராங்குட்டான் போன்றவை இருக்கும் உயிரியல் பூங்காக்கள் ஆபிரிக்காவில் மூடப்பட்டுள்ளன.

அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் மனிதர்களிடம் இருந்து, அவற்றுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவை மூடப்பட்டுள்ளன.

எனினும், மனிதர்களிடம் இருந்து மனிதக் குரங்குகளுக்கு வைரஸ் பரவுமா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

Related posts

வெள்ளை வான் சாரதிகளின் மறியல் நீடிப்பு!

G. Pragas

ஒன்பதாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்!

G. Pragas

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; பலர் தப்பியாேட்டம்!

G. Pragas