கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

மனிதப் பாவனைக்கு உதவாத கருவாடுகள் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் வாழைச்சேனை பகுதியில் நடாத்தப்பட்ட விசேட சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மனிதப் பாவனைக்கு உவாத பொருட்கள் சிலவற்றை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (16) கைப்பற்றியுள்ளனர்.

வாழைச்சேனை பொது மைதானத்தில் அமைக்கப்பட்ட விசேட சந்தையில் வாழைச்சேனை பிரதேச சபையும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரும் இணைந்து பொருட்களின் தரங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது பாவனைக்கு உதவாத கருவாடுகள் மற்றும் மரக்கறிகள் மீட்கப்பட்டு அகற்றப்பட்டது. (150)

Related posts

அட்மிரல் ரவீந்திர “என்னை படுகொலை செய்ய முயன்றார்” நிசாங்க குற்றச்சாட்டு!

G. Pragas

சுவிஸ் மதபோதகருக்கு கொரோனா தொற்று உறுதி!

Bavan

தனிமை உத்தரவை மீறியோர் கடற்படை காவலில்!

reka sivalingam