இந்திய செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

மனித உணர்வைத் தொட்டுவிட்ட கவிப்பேரரசுக்கு இன்றுடன் அகவை அறுபத்தேழு!

தமிழரின் உணர்வுகளில் வேரூன்றி நின்ற கவிஞர்களின் பட்டியலில் சுப்பிரமணிய பாரதிக்கு அடுத்து புதுக்கவிதை மரபில் தனக்கென ஒரு இடம்பிடித்த கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து ஆவார். கவிஞருக்கு இன்றுடன் அகவை அறுபத்தேழு.

இவர் ஒரு சிறந்த பாடலாசிரியரும் ஆவார். இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலே இவர் முதன் முதலாக எழுதிய திரைப்பாடலாகும்.

முன்பு இளையராயவுடனும் பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து எழுதிய பாடல்கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தவை.

இவர் ஒரு கவிஞர் என்பதையும் தாண்டி, இவர் ஒரு கதையாளர், வரலாற்று எழுத்தாளர், சிறுகதையாளர், நாவல் எழுத்தாளர், எழுத்தாளர் என பன்முக திறன் கொண்ட ஒரு மனிதர்.

அவரின் படைப்புகள் வருமாறு:

கவிதைத் தொகுப்புகள்

  • வைகறை மேகங்கள்
  • திருத்தி எழுதிய தீர்ப்புகள்
  • இன்னொரு தேசியகீதம்
  • எனது பழைய பனையோலைகள்
  • இரத்ததானம்
  • கவிராஜன் கவிதை
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  • தமிழுக்கு நிறமுண்டு
  • பெய்யெனப் பெய்யும் ம‌ழை
  • “எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்”
  • கொடி மரத்தின் வேர்கள்

தன்வரலாறு

  • இதுவரை நான்

கட்டுரைகள்

  • கல்வெட்டுக்கள்
  • என் ஜன்னலின் வழியே
  • நேற்று போட்ட கோலம்
  • ஒரு மெளனத்தின் சப்தங்கள்
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
  • வடுகபட்டி முதல் வால்கா வரை
  • இதனால் சகலமானவர்களுக்கும்
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்

நாவல்

  • வானம் தொட்டுவிடும் தூரம்தான்
  • மீண்டும் என் தொட்டிலுக்கு
  • வில்லோடு வா நிலாவே
  • சிகரங்களை நோக்கி
  • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
  • காவி நிறத்தில் ஒரு காதல்
  • தண்ணீர் தேசம்
  • கள்ளிக்காட்டு இதிகாசம் (தொடராக வெளிவந்தது)
  • கருவாச்சி காவியம் (தொடராக வெளிவந்தது)

வைரமுத்துவும் ஜெயகாந்தனும்

  • மூன்றாம் உலகப்போர் (தொடராக வெளிவந்தது)

ஒலி நாடாக்கள்

  • கவிதை கேளுங்கள்
  • தேன் வந்து பாயுது

Related posts

மக்கள் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும் _ மஹிந்த

கதிர்

பாண்டிய இளவரசியை திருமணம் செய்ததால் உருவாகியதே சிங்கள மொழி – துரைராசசிங்கம்

G. Pragas

புலிகள் குறித்து சர்ச்சையான கருத்து: விஜயகலா மீதான விசாரணை ஒத்திவைப்பு

G. Pragas