செய்திகள் விளையாட்டு

மனிஷ் பாண்டே காட்டடி: ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்!!

நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 40ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை 8 விக்கெட்களால் வீழ்த்தியது ஹைதராபாத்.

டுபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு உத்தப்பா,பென் ஸ்டோக்ஸ் இணை ஆரம்பம் வழங்கியது. அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த உத்தப்பா 19 ஓட்டங்களுடன் நடையைக்கட்டினார். எனினும் ஸ்டோக்ஸுடன் ஜோடி சேர்ந்த சாம்சன் அதிரடி காட்டினார். அணி 86 ஓட்டங்களை பெற்ற வேளை சாம்சன்(36), ஸ்ரோக்ஸ்(30) ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த பட்லர் (9) ஓட்டங்களுடன் ஏமாற்றினார். தொடர்ந்து மத்தியவரிசையில் ஸ்மித்(19), ரியான் பராக்(20) ஓட்டங்களுடன் ஹோல்டரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து பவிலியன் திரும்பினர்.

இறுதியில் இருபது ஓவர்கள் நிறைவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற ஆர்ச்சர்(16),ராகுல் திவாடியா (2) ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். பந்துவீச்சில் ஹோல்டர் 3 விக்கெட்களையும் விஜய் சங்கர்,ரசிட்கான் தலா ஒரு இலக்கையும் கைப்பற்றினர்.


155 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹைதராபத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து டேவிட் வோர்ணர்(4), பயர்ஸ்ரௌவ்(10) ஆகியோரை பவிலியன் அனுப்பினார் ஆர்ச்சர். எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே ,விஜய்சங்கர் இணை ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்தனர்.விஜய் சங்கர் ஒருபுறம் நிதானிக்க மறுபுறம் மனிஷ் பாண்டே சிக்ஸர் பவுண்டரிகளாக பந்துகளை தெறிக்கவிட்டார்.


1.5 ஓவர்கள் மீதமிருக்க ஹைதராபத் அணி வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் மனிஷ் பாண்டே 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடங்கலாக 83 ஓட்டங்களையும் விஜய் சங்கர் 52 ஓட்டங்களையும் பந்துவீச்சில் ஆர்ச்சர் 2 விக்கெட்களை கைப்பற்றினர்.


போட்டியின் ஆட்டநாயகனாக மனிஷ் பாண்டே தெரிவு செய்யப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சார்ஜா மைதானத்தில் மோதுகின்றன.

Related posts

விஜய் 64 இன் செக்கண்ட் லுக் வெளியிடும் திகதி

Bavan

வளர்ந்து வரும் நாகரீகத்தின் விளைவு

Tharani

10 லட்சம் வேலைவாய்ப்பு திட்டம் தோல்வி

reka sivalingam