செய்திகள் பிந்திய செய்திகள்

மனைவியை துஷ்பிரயோகம் செய்யக் கட்டாயப்படுத்தியவர் உட்பட ஐவர் கைது

தனது மனைவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய கட்டாயப்படுத்தி இடமளித்து அதனை காணொளி மூலம் முகநூலில் பதிவிடுவதாக மிரட்டி சுமார் 5 இலட்சம் ரூபாவரை நபரொருவரிடமிருந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பாதாள உலக தலைவன் மாமாஸ்மியின் சகா என கருதப்படும் மொஹம்மட் ரஹீம் அப்துல் ரவூப் உள்ளிட்ட ஐவரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனப்படி, மனைவியை கட்டாயச் சிறைப்படுத்தியமை, பலியல் ரீதியாக சித்திரவதை செய்தமை, தாக்கியமை மற்றும் பணம் கொள்ளையிட்டமை, முகநூலில் பாலியல் உறவு காணொளியை பதிவிடுவதாக மிரட்டியமை ஆகிய குற்றச்சட்டுக்களின் கீழ் இந்த ஐவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

நேற்று முன் தினம் (29) நீதிமன்றில் ஆஜரப்படுத்தப்பட்ட ஐவரையும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

Related posts

தாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலிடம்

Tharani

ஜிப்றவுண் ஞாபகார்த்த மண்டபம் திறப்பு! – சிறிதரனுக்கு புகழாரம்

G. Pragas

ஆபத்தில் உள்ள 10 நாடுகள் பட்டியல் வெளியீடு!

Tharani