செய்திகள் பிரதான செய்தி மன்னார்

மன்னாருக்கு தப்பி வந்த தொற்றாளி கைது!

பேலியகொடை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் மன்னார் – புதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதியானவரே இவ்வாறு மன்.புதுக்குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்துள்ளார்.

குறித்த நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இன்று (25) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

“குறித்த நபர் பேலியகொடை மீன் சந்தைப் பகுதியில் வேலை செய்துவந்த நிலையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வைரஸ் தொற்று நேற்று (24) உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் அங்கிருந்து தப்பி வந்த நிலையில் மன்.புதுக்குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்தார். குறித்த நபர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வந்தார் என்பதால் மன்.புதுக்குடியிருப்புப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கைது செய்யப்பட்ட அவர், கந்தக்காடு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

இதனிடையே, குறித்த நபருடன் தொடர்புபட்டவர்களை கண்டறியும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது” – என்றார்.

Related posts

தரிசு நிலங்கள் தொடர்பாக ஜனாதிபதி தீர்மானம்

Tharani

இன்றைய நாள் ராசி பலன்கள் (14/3) – உங்களுக்கு எப்படி?

Bavan

தமிழர் விடுதலை கூட்டணியின் அறிவிப்பு!

G. Pragas