கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

மன்னார் ஆயருடன் சஜித் குழு சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லம், திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு இன்று (08) விஜயம் மேற்கொண்டார்.

மன்னார் ஆயர் இல்லத்திற்கு இன்று காலை விஜயம் செய்த சஜித் பிரேமதாச குழுவினர் மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து பேசினர்.

சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது சஜித் பிரேமதாசவுக்கு மன்னார் ஆயர் ஆசி வழங்கினார்.

இதையடுத்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் ஆலயத்தின் அறங்காவலர்கள் மற்றும் ஆலய குருக்களை சந்தித்தனர்.

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய ஆலய கட்டிட நிர்மாணப் பணிகளையும் இவர்கள் பார்வையிட்டனர். அறங்காவலர்கள் ஆலய கட்டிடப் பணிகுறித்த தேவைகளை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் எடுத்துரைத்தனர்.

Related posts

அன்று விட்ட பிழையை இன்றும் செய்யாதீர்கள் – விஜயகலா

G. Pragas

மாலித் தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் பலி! 60 பேரை காணவில்லை!

G. Pragas

நதிகளை மீட்க நடிகைகள் கூக்குரல்

G. Pragas

Leave a Comment