செய்திகள் பிராதான செய்தி மன்னார்

மன்னார் ஆயரை சந்தித்தார் ஜலானி பிரேமதாச

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலானி பிரேமதாச மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்படி, இன்று (05) மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு சென்ற அவர், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்தார்.

இதன்போது கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்கா, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயண எச்சரிக்கை விடுத்துள்ளது ஐக்கிய அரபு இராச்சியம்

G. Pragas

சம்புமடுவில் வெடி பொருட்கள் மீட்பு!

G. Pragas

கஞ்சிப்பானயின் தந்தை, சகோதரன் உட்பட அறுவர் கைது

G. Pragas

Leave a Comment