செய்திகள் மன்னார்

மன்னார் ஆயர் மற்றும் கனடா உயர்ஸ்தானிகர் இடையில் சந்திப்பு

மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மெக்கின்னனுக்கும் இடையில் இன்று (30) மன்னார் ஆயர் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலமை தொடர்பாகவும் ஏப்ரல் மாதம் 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்தும், மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டறிந்து கொண்டார்.

Related posts

தாயை கொலை செய்தமை உறுதி; மகன், பேரனுக்கு விளக்கமறியல்

G. Pragas

நன்னீர் மீன் வளர்ப்பை ஆராய பங்களாதேஷ் செல்லும் டக்ளஸ்

G. Pragas

‘நஞ்சு உணவின் தீமைகளும் நஞ்சற்ற உணவின் நன்மைகளும்’ விழிப்புணர்வு!

கதிர்

Leave a Comment