in , ,

மன்னார் செபஸ்தியார் ஆலயத்தில் நினைவேந்தல் ஆராதனை!

ஈஸ்டர் பயங்கரவாதத்தின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று காலை 5.45 மணியளவில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் குறித்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன்போது தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக இறை பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதேவேளை மன்னார் மாவட்டத்திலுள்ள ஆலயங்களிலும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, தேவாலயங்களுக்கு இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தாக்குதல் நினைவேந்தல்!

அம்பாந்தோட்டையில் கதிரியக்க பொருட்களுடன் சீன கப்பல்!