செய்திகள்மன்னார்

மன்னார் பிரதேச சபை – தவிசாளராக இஸ்ஸதீன்!

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் நேற்றுத் தெரிவுசெய்யப்பட்டார்.

மன்னார் பிரதேச சபையின் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எஸ்.எச்.எம்.முஜாகிர் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 2 தடவைகள் தோற்கடிக்கப்பட்டது. அதனையடுத்து புதிய தவிசாளர் தெரிவு, சபையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக்டிறஞ்சன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் உறுப்பினரான எம்.ஐ.எம். இஸ்ஸதீனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. வேறு பெயர் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை. அதனையடுத்து, சபையின் 21 உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் புதிய தவிசாளராக போட்டியின்றி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவுசெய்யப்பட்டார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994