செய்திகள் பிரதான செய்தி மன்னார்

மன்னார் நீதிமன்றில் தகாத வார்த்தை பேசிய சட்டத்தரணியால் ஏற்பட்ட குழப்பம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட சதாெச வளாக மனித புதைகுழி தொடர்பான வழக்கு, இன்றையதினம் (11) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அரச சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அவர்கள் குழு சார்பாக ஆஜராகிய அரச சட்டத்தரணி, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளுக்கு எதிராக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகிய அனைத்து சட்டத்தரணிகள் மற்றும் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள், குறித்த அரச சட்டத்தரணிக்கு எதிராகவும் குறித்த வார்த்தை பிரயோகத்திற்கு மன்னிப்புக் கோரும் வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தும் வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த வார்த்தை பிரயோகத்திற்கு மன்னிப்பு கோரியதை தொடர்ந்து மீண்டும் வெளிநடப்பு செய்த சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கையில் லந்து கொண்டுள்ளனர்.

Related posts

தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்

Tharani

ஷஹ்ரான் மகளை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு!

admin

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிழக்கு ஆளுநர் உதவி

G. Pragas