செய்திகள் பிரதான செய்தி மன்னார்

மன்னார் விபத்தில் சகோதரிகள் பலி!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று (09) மதியம் இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும் முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி சென்ற பிக்கப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

சகோதரிகளான சந்தியோகு லிண்டா, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார்.

சந்தியோகு டெரன்சி, மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி வருகின்றனர்.

குறித்த இருவரும் கடமை முடிந்த நிலையில் மன்னாரில் இருந்து கட்டை அடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் தொடர்புடைய வாகனத்தின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Related posts

சரவணன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிய முதல் பாடல்

Bavan

மகப்பேற்று மருத்துவ நிபுணர் சரவணபவவுக்கு “அன்பே சிவம்” விருது

G. Pragas

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது!

reka sivalingam