in ,

மயானக் கட்டமைப்பில் பழுது, வவுனியாவில் தேங்கிக் கிடக்கும் சடலங்கள்!

மயானக் கட்டமைப்பில் பழுது, வவுனியாவில் தேங்கிக் கிடக்கும் சடலங்கள்!

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள எரிவாயு மயானக்கட்டமைப்பில் பழுது ஏற்பட்டுள்ளமையால் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தேங்கியுள்ளன என்று கூறப்படுகின்றது. கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் வன்னி மாவட்டங்களை சேர்ந்தவர்களது சடலங்கள் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான எரிவாயு மயானத்தில் எரியூட்டப்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியாக அதிகமான சடலங்கள் எரியூட்டப்பட்டமையால் குறித்த கட்டமைப்பில் அண்மையில் பழுது ஏற்பட்டிருந்தது. பின்னர் அது திருத்தப்பட்டிருந்தது. ஆயினும் மீண்டும் குறித்த கட்டமைப்பில் பழுது ஏற்ப்பட்டுள்ளமையால் கடந்த இரு நாள்களுக்கு மேலாக கொரோனாவால் உயிரிழப்பவர்களது சடலங்கள் எரியூட்டப்படாமல் தேங்கிக் காணப்படுகிறது.

இதனால் சில சடலங்கள் ஓட்டமாவடி மற்றும் கெக்கிராவ போன்ற பகுதிகளில் அமைந்துள்ள மயானங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கொரோனாவால் உயிரிழந்த 22 நபர்களது சடலங்கள் வவுனியா மருத்துவமனையின் பிரேத அறையில் தேங்கியுள்ளன என்று கூறப்படுகின்றது.

சாவகச்சேரியில் அன்டிஜென் 13 பேருக்கு தொற்றுறுதி!

தண்ணீர் கொடுப்பனவை செலுத்த நடமாடும் சேவை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஏற்பாடு!