கிழக்கு மாகாணம் செய்திகள்

மரக்கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது!

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான பொத்தானை பகுதியில் அனுமதியின்றி விற்பனைக்காக மரக்கடத்தில் ஈடுபட்ட சந்தேக நபரும், மூன்று வகையான மரங்களும் இன்று (13) கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொத்தானை பகுதியில் வெட்டப்பட்ட துண்டு மரங்கள் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் இருந்த வேளையில் ஒன்றரை இலட்சம் பெறுமதியான பனிச்சை, பாலை, மதுரை மரங்களுடன், சந்தேக நபர் ஒருவர் வட்டார வன உத்தியோகத்தர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார். (150)

Related posts

மட்டுவில் சதொச நிலையங்கள் திறப்பு

reka sivalingam

ஞானசார மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய பணிப்புரை

G. Pragas

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம்; ரிஷாட்டின் சகோதரன் கைது!

G. Pragas