செய்திகள்

மரக்கன்றுகளை வழங்கி வைத்த கஜதீபன்

தென்மராட்சி பகுதிகளில் சாவகச்சேரி பிரதேச சபை உபதலைவர் செ.மயூரன் மற்றும் முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் இணைப்புச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் பல்வேறு மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்.

இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் (26) கொடிகாமம் மற்றும் கெற்பேலி கிராமங்களில் பொதுமக்களுடனான சந்திப்பு இடம்பெற்றதோடு பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பயன்தரு மரக்கன்றுகளும் பொது மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இச்சந்திப்பில் சாவகச்சேரி பிரதேச சபை உப தலைவர் செ.மயூரன், முன்னாள் சாவகச்சேரி நகராட்சி மன்ற உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Related posts

ராஜிதவை தேடி அவரது வீட்டில் தேடுதல்

G. Pragas

கல்லடி கடற்கரையில் சடலம் மீட்பு

Tharani

நிறைவேற்று அதிகாரத்தில் கை வைக்க அவசியமில்லை- வேலு

admin

Leave a Comment