வன்னித் தமிழ் மக்கள் ஒன்றிய பசுமைப் புரட்சி செயற்திட்டத்தின் தொடர்ச்சியாக அண்மையில் யாழ். விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம் மாணவர்களுக்கு பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்திய செல்வரஞ்சன் நிரஞ்சனாவினால் இயற்கை மற்றும் மர நடுகையின் முக்கியத்துவம் தொடர்பாக கருத்தமர்வும் நடத்தப்பட்டது.