in , ,

மரக் கிளை முறிந்து குழந்தை பலி!

வவுனியா – கனகராயன்குளம் ஆயிலடி பகுதியில் இன்று (20) மாலை வேப்பம் மரம் ஒன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

சீரற்ற காலநிலையை தொடர்ந்து வீசிய பலத்த காற்றினால் வேப்பம் மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் ஒன்றரை வயது குழந்தை மற்றும் சிறுமிகள் இருவர் காயமடைந்தனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த சிறுமிகள் இருவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வயதுக்கு வராத சைக்கிள் கட்சி – கிண்டலடிக்கிறார் விக்கி!

ரி-20 உலகக் கிண்ண தொடர் ஒத்திவைப்பு!