in ,

மரணவீட்டால் 28 பேருக்கு கொரோனாத் தொற்று!

மரணவீட்டால் 28 பேருக்கு கொரோனாத் தொற்று!

இதேவேளை, மேற்குறித்த 215 பேரில் 28 பேர் மரண வீட்டுக்குச் சென்றதனால் தொற்றுக்குள்ளாகினர் என்று தெரிவிக்கப்பட்டது.

வவுனியா ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில், பட்டடைபிரிந்தகுளம் பகுதியில் கடந்த 24 ஆம் திகதி மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் சுகாதார விதிமுறையை மீறி பலர் கலந்துகொண்டிருந்தனர்.

பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதனையடுத்து புளியங்குளம் மருத்துவமனைக்கு சென்று அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்டபோது இருவருக்கும் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனைடுத்து வவுனியா வடக்கு சுகாதாரப் பிரிவினர், மரணச்சடங்கில் கலந்துகொண்ட நெருங்கிய உறவினர்கள் 30 பேருக்கு நேற்று அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்போதே 28 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தி, மரணச்சடங்கில் பங்கேற்ற ஏனையவர்களை இனங்கண்டு பரிசோதனை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறையை மீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

எனவே பொதுமக்கள் தனியாள் இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளைத் தவறாது பின்பற்றுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்துகின்றனர்.

பி.சி.ஆர், அன்டிஜென் சோதனைகளில் வடக்கில் ஒரே நாளில் 572 பேருக்குக் கொரோனா!

கொரோனாத் தொற்றால் யாழ்ப்பாணத்தில் ஐவர் சாவு!