செய்திகள் பிந்திய செய்திகள்

மரண தண்டனை கைதிக்கு ஏன் மன்னிப்பு – சிறிசேன விளக்கம்

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளியான மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கிய முடிவு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்தியுள்ளார்.

நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மூன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர், மதத் தலைவர்கள் சிவில் அமைப்புக்கள், முன்னாள் நீதிபதிகளின் வேண்டுகோளின் பேரில் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலவச போசாக்கு வேலைத்திட்டம் அறிமுகம்

Tharani

அங்கஜனுக்கு எதிராக போராட்டம்! – உறுப்பினர்கள் வெளிநடப்பு

G. Pragas

யாழில் 18 கிலாே கஞ்சா மீட்பு; ஒருவர் கைது!

Tharani