செய்திகள் யாழ்ப்பாணம்

மரண தண்டனை தீர்மானத்திற்கு யாழில் 95% ஆதரவாம்

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்காட்சி ஒன்றில் 95% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் கருத்துக் கணிப்பு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எண்டர் பிரைசஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றது.

அதில் பங்குபற்றிய 20,634 பேரில் 94.89 சத வீதத்தினர் ஜனாதிபதியின் தீர்மானத்துக்குச் சார்பாக வாக்களித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Related posts

ரவிகரன், சிவாஜிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Tharani

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை தாக்கல் – செய்தி தாெகுப்பு

Tharani

ஹெரோயினுடன் 13 பேர் கைது

Tharani

Leave a Comment