செய்திகள் பிரதான செய்தி

மரண தண்டனை நிறைவேற்றும் தடை நீடிப்பு!

இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு இன்று (29) நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டிசம்பர் மாதம் 10ம் திகதி வரை இடைக்கால தடையை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

குறித்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனு மீதான வழக்கின் விசாரணை, மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஜூலை மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Related posts

தேரர்களின் அடாவடியைக் கண்டித்து முல்லைத்தீவில் போராட்டம்!

G. Pragas

உண்டியல் உடைத்த திருடனை மடக்கிப் பிடித்த மக்கள்

கதிர்

வறட்சி காரணமாக இலட்சக் கணக்கில் மக்கள் பாதிப்பு!

Bavan