செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

மரத்திலிருந்து விழுந்தவர் மரணம்

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் சரசாலைப் பகுதியில் இன்று (14, செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10.30 மணிக்கு இடம் பெற்றுள்ளது

தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்க மரத்தில் ஏறிய போது தவறி விழுந்துள்ளார். உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சரசாலை தெற்கு சரசாலையைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் வயது 46 என்பவரே மரணமடைந்தவராவார் .

தென்மராட்சி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணையை மேற்கொண்டு சட்ட வைத்திய அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் மாேதியதில் அறுவர் படுகாயம்!

கதிர்

இங்கிலாந்து அணி இலங்கையில்

கதிர்

கொவிட்- 19; கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம்

reka sivalingam